2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வாகன விபத்துக்களினால் ஜுன் மாதம்வரை 29 பேர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 22 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஹுஸைன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜுன் மாதம் வரையிலான காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 29 பேர் பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன தெரிவித்தார். அத்துடன், தற்போது நாளொன்றுக்கு சுமார் 250 பேருக்கு மேல் போக்குவரத்து ஒழுங்குகளை மீறியமைக்காக தண்டிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் நேற்று  வியாழக்கிழமை மாலை திணைக்கள கூட்டுத்தாபன அதிகாரிகள், பொதுமக்கள், போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள்  மத்தியில் வீதி விபத்துக்களும் அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகளும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற 706 வாகன விபத்துக்களில் 54 பேர் பலியான அதேவேளை,   வீதி ஒழுங்குகளை மீறியமை தொடர்பில்  47,278 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.   மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

வீதி விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், வீதி விபத்துக்களால் ஏற்படும்
உயிரிழப்புக்கள், உடமை அழிவுகள்,  அநாவசிய நெருக்கடிகள் என்பனவற்றைத் தடுக்கும் வகையில் முடிந்தளவு சட்டத்திற்குப் புறம்பான விடயங்களில் எதுவித தயவுதாட்சண்யமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரிகளைப் பணித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .