2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மலசலகூடக் குழியில் விழுந்த 3 வயது குழந்தை பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 01 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மலசல கூடத்திற்காகத் தோண்டப்பட்ட குழியில் வீழ்ந்து மூர்ச்சையான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை, சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று சனிக்கிழமை உயிரிழந்தது.

ஓட்டமாவடி காகித நகர் அல் மஜ்மா கிராமத்தில் நேற்று பிற்பகல் பதுறுதீன் அப்துல் அஸீஸ் எனும் இக்குழந்தை மலசலகூடத்திற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் மழை நீர் நிரம்பிக் கிடந்த குழிக்குள் விழுந்துள்ளது.

இக்குழந்தை குழியில் விழுந்த சந்தர்ப்பத்தில் தந்தை தனது கைத்தொலைபேசியை சார்ஜ் நிரப்புவதற்காக பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் கண்பார்வையிழந்த பாட்டியும் 5 வயது சிறுமியுமே இருந்துள்ளனர். குழந்தையின் தாய் வீட்டுப்பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு சென்றுள்ளார்.

தந்தை சற்று நேரத்தில் வந்து குழந்தை காணாமல் போயிருப்பதை அறிந்து தேடிய போது குழந்தையை மலசலகூடக் குழியில் இருந்து மீட்டுள்ளார்.

உடனடியாக குழந்தை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .