2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தினை இம்மாம் 30 ஆம் திகதிக்குள் முடிக்கும்படி அறிவுறுத்தல்

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜிப்ரான், சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவிறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், பசீர் சேகுதாவுத், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபை தவிசாளர்கள் உட்பட கலந்துகொண்டனர்.

இதேவேளை, திவிநெகு, கமநெகும போன்ற திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை செயற்படுத்துவதற்கு தேவையான அனுமதியும் வழங்கப்பட்டன.  




  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .