2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

35 வருடங்களின் பின்னர் கல்லடி அரசாங்க விடுதி வீதி திறப்பு

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித், எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடிப் பகுதியில் கடந்த 35 வருடமாக மூடப்பட்டிருந்த கல்லடி அரசாங்க விடுதி வீதி வெள்ளிக்கிழமை (07) பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.

35 வருடங்களுக்கு முன்னர், இந்திய அமைதிப் படை இப்பகுதியில் முகாமிட்டதையடுத்து இவ்வீதி பொதுமக்களின் பாவினைக்கு விடப்படாமல் மூடப்பட்டது. அதன் பின்னர், இலங்கை இராணுவமும் இப்பகுதியில் முகாம் அமைத்து நிலைகொண்டதையடுத்து, இவ்வீதி தொடர்ந்தும் மக்களின் பாவினைக்கு தடை செய்யப்பட்டே இருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண படைத்தளபதி ஆகியோரிடம்  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுறை சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வீதி  மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுறை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பி. பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி. மனோகரன், முன்னாள் மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் ஜோர்ஜ்பிள்ளை;, மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உட்பட் பலர் கலந்துகொண்டு வீதியை திறந்துவைத்தனர்.

இதன்போது, படைமுகாம் அமைப்பதற்கு அமைக்கப்பட்ட முள்வேலிகள் மற்றும் வேலிகள் அகற்றப்பட்டு சிரமதானம் அடிப்படையில் துப்புரவு செய்யப்பட்டது.

அனைத்தொடர்ந்து, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டில் கிறவல் இடும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதால் விரைவாக தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X