2025 மே 05, திங்கட்கிழமை

பாதை அனுமதிப்பத்திரமின்றிய 4 தனியார் பஸ்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பாதை அனுமதிப்பத்திரமின்றி கொழும்புக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட 4  தனியார் பஸ் வண்டிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடித்ததுடன், மேற்படி பஸ் வண்டிகளின் சாரதிகளையும் கைதுசெய்து தண்டப்பணம் செலுத்திய பின்னர் இவர்களை விடுவித்துள்ளதாக  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.உதயகுமாரவின் நெறிப்படுத்தலின் கீழ்,  பாதை  அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளை பொலிஸாரின் உதவியுடன் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் கீழ் கடந்த ஒரு வாரத்தில் பாதை  அனுமதிப்பத்திரமின்றி கொழும்புக்கான  போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட 4 பஸ் வண்டிகள் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டு சாரதிகள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்படி பஸ் வண்டிகளுடன் கைதுசெய்யப்பட்ட சாரதிகளை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, தலா 100,000 ரூபா தண்டம்; செலுத்துமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

எதிர்காலத்தில் பாதை அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்துச்  சேவையில் ஈடுபட்டால் குறிப்பிட்ட பஸ் வண்டிகள் அரசாங்க உடைமையாக்கப்படும் என நீதிவான் இவர்களை எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X