2025 மே 02, வெள்ளிக்கிழமை

விளையாட்டு மைதானம் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


நகர திட்டமிடல் அதிகாரசபையின் நிதியுதவியுடன் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

நகர திட்டமிடல் அதிகாரசபையின் நிதியுதவியுடன் மன்னார் நகர சபை குறித்த புனரமைப்புப்பணிகளை மேற்கொள்ளுவதற்காக ஒப்பந்த கைச்சாத்திடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(23) மன்னார் நகர சபையில் இடம்பெற்றது.

சுமார் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கிழ் இடம்பெறவுள்ள குறித்த வேளைத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் ஆரம்பநிகழ்வின் முதற்கட்ட பணிகளுக்காக 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மைதானத்திற்கு 800லோட் மண் நிறப்பும் பணிகள் ஆராம்பிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், நகர அபிவிருத்தி திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர்  குணதிலக்க, திட்டமிடல் அலுவலகர் மைக்கல் தாசன் மற்றும் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நகர சபை செயலாளர்,உப தலைவர்,உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .