2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்ட 446 வர்த்தக நிலையங்களில் சோதனை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் சட்டவிரோத வர்த்தகத்தில்  ஈடுபட்ட 446 வர்த்தக நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக  அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின்  மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின்  கீழ், அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களம் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், 169 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 2 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா தண்டம்  அறவிடப்பட்டதாகவும்  அவர் தெரிவித்தார்.

முத்திரையிடப்படாத நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளை பாவித்தமை, நிறை குறைவாக உணவுப் பொருள்களை விற்பனை செய்தமை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடான முறையில் கருவிகளை பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .