2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 46ஆவது உலக தொடர்புதின விழா

Kogilavani   / 2012 ஜூலை 25 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                               (ரி.லோஹித்)
மட்டக்களப்பு, மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் 46ஆவது உலக தொடர்புதின விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டு.மறைமாவட்ட ஆயர் பேரருள் திரு யோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் கலந்துகொள்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் அருள்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருள்தந்தை ரி.ஏ.ஜுலியன், எகெட் கரித்தாஸ் இயக்குனர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

வரவேற்புரையினை சமூகத் தொடர்பு  நிலைய இயக்குனர் அருட்தந்தை லெஸ்வி ஜெயக்காந்தனும், 'மறைக்கல்வியும் ஊடகங்களும்' என்ற தலைப்பிலான சிறப்புரையினை அருள்தந்தை சி.வி.அன்னதாஸ் அடிகளாரும் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில், கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான இரா.நாகலிங்கம்(அன்புமணி), மறைக்கல்வி மற்றும் இலக்கிய பணிப்பாளர்  மெற்றில்டா இராஜேந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .