2025 மே 02, வெள்ளிக்கிழமை

உறுகாமத்தில் 49 வீடுகள் நிர்மாணம்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் செங்கலடி, உறுகாமம் மீளக்குடியேற்ற கிராமத்தில் 49 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றது என மட்டு. மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன என மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த வீடுகள் மக்கள் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படுகின்றன. இதற்கென சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருவதாக திட்டமிடல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மலசலகூடம் மற்றும் பாடசாலை ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X