2025 மே 08, வியாழக்கிழமை

வாழைச்சேனையில் 5 கைக்குண்டுகள் மீட்பு

Super User   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இரு வேறு இடங்களில் இருந்து வெள்ளிக்கிழமை (04) மாலை ஐந்து கைக் குண்டுகளை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் கோராவளி கோவில் வீதியில் உள்ள காணியில் மலசல கூடத்திற்கான குழி அமைக்கும் பொருட்டு மடுவு தோண்டியசமயம் பிளாஸ்டிக் டின் ஒன்று இருப்பதைக் கண்ட காணிஉரிமையாளர் திறந்து பார்த்த போது அதில் கைக்குண்டுகள் இருப்பதைக் கண்டு வாழைச்சேனை பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளர்.

இதையடுத்து பொலிஸாரும் இராணுவத்தின் குண்டு செயழிலக்கும் பிரிவினருக்கு இனைந்து குண்டை செயழிலக்கச் செய்ததுடன் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை கோறளைப்பற்று, கிண்ணயடி கிராம சேவகர் பிரிவில்  கல்லடி மூலை என்ற இடத்தில் ஆற்றங்கரையோரம் குண்டொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருப்பதைக் கண்ட பொது மக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து குண்டை செயழிழக்கச் செய்ததுடன் அச் சம்வம் தொடர்பாகவும் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X