2025 மே 01, வியாழக்கிழமை

ரீ-56 ரக துப்பாக்கி ரவைகள் 319 மீட்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள கரடிப்பூவல் எனுமிடத்தில் ரீ-56 ரக துப்பாக்கிக்கு பாவிக்கப்படும் 319 ரவைகளைத் தாம் மீட்டதாக படையினர் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கரடிப்பூவல் எனுமிடத்திலுள்ள நீரோடை ஒன்றுக்குப் பக்கத்தில் பை ஒன்றினுள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாகப் படையினர் தெரிவித்தனர்.

எனினும், இவை துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாகவும் போர் இடம்பெற்ற காலத்தில் இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் படையினர் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .