2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 62,000 ஹெக்டயரில் பெரும்போக வேளாண்மை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 62 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில்; பெரும்போக வேளாண்மை செய்கை பண்ணப்படுகின்றன.

இவ்வருடம் விவசாயிகளின் நன்மை கருதி இயந்திரத்தினால் தானியங்கள் விதைக்கும் கருவியினை எமது விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. என விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பாடவிதான அதிகாரி ஏ.எல்.எம்.சல்மான் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிமை மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு தானியங்கள் விதைக்கும் இயந்திரத்தினை அறிமுகப்படுத்தி வைத்து விவசாயிகள் மத்தியில் 
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த காலங்களில் விவசாயிகள் மனிதனைப் பயன்படுத்தியும் பின்னர் மாடுகளைப் பயன்படுத்தியும் உழுதல், அறுவடை செய்தல், சூடு அடித்தல் போன்ற பல விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். தற்போது அறுவடைக்கும் இயந்திரம் வந்துள்ளது. இயந்திரமயமான இந்த உலகத்தில் தொழில்நுட்ப வளர்சி அதிகரித்துக் கொண்டு செல்கின்ற இக்கால கட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கும் அவை இலகுவாக அமைகின்றன.

அந்த வகையில்தான் இதுவரைகாலம் மனிதன் தமது கைகளினால் செய்து வந்த நெல் உட்பட்ட தானிய வகைகளை தற்போது இயந்திரத்தின் மூலம் விதைப்பதற்குரிய வசதி ஏற்பட்டுள்ளது.

இந்த விதைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 8 தொடக்கம் 10 ஏக்கர்கள் விதைக்கலாம்.  ஒரு ஏக்கருக்கு 2 புசல் நெல்தான் விதைக்க வேண்டும் என்பது விவசாயத் திணைக்களத்தின் சிபார்சு ஆகும். ஆனால் விவசாயிகள் கைகளினால் விதைக்கும்போது அவை 3 புசலுக்கு மேலாகின்றது. ஆனால் இந்த இயந்திரத்தினைப் பயன்படுத்தி விதைத்தால் ஒரு ஏக்கருக்கு சரியாக 2 புசல் நெல் மாத்திரமே தேவைப்படுகின்றது. இதன் மூலம் விவிசாயிகள் நட்டமடைய மாட்டார்கள்.

இந்த தானியங்கள் விதைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தி விதைத்தால் களை பிடுங்குவது கிருமிநாசினி, களை நாசினி  மற்றும் உரவகைகள் போன்றன விசிறுவது எல்லாம் இலகுவாக அமையும். வேளாண்மை குட்டி அடிப்பதும் அதிகரிக்கும் இந்த விதைப்பின் மூலம் இரண்டு நாற்று வரிகளுக்கிடையில் 6 அங்குலமும் இரண்டு பயிர்களுக்கிடையில் 2 அங்குலமும் காணப்படும். இதனால் பயிரின் நாலாபக்கமம் சூரிய ஒளி பட்டு பயிர் செழிப்புற வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. இதன் மூலம் 25 தொடக்கம்  39 வீதம் விளைச்சல் அதிகரிக்கும்.

இந்த விதையிடும் கருவியினை விவசாயிகள் எமது விவசாயத் திணைக்களத்திடமிருந்து இலவசமாகப் பெற்று தமது விதைப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம.; இது மேட்டுநிலப் பியிர்கள் நடுவதற்கும் பயன்படுத்தலாம். இலங்கையில் தயாரிக்கப்படும் இந்த விதையிடும் கருவியானது 250000.00 ரூபா பெறுமதியாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X