2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போரதீவுப்பற்றில் 68.3 சதவீதமானோருக்கு வேலை இல்லை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 24 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  போரதீவுப்பற்று  பிரதேச  செயலகப் பிரிவில்    68.3  சதவீதமானோர்  வேலைவாய்ப்பின்றி  உள்ளதாக  அப்பிரதேச  செயலாளர்  என்.வில்வரெட்னம்  தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை  28,162 பேர்  எனவும்  அவர்  கூறினார்.

இப்பிரதேச செயலாளர் பிரிவில் 684  பேர் அரசாங்க   தொழிலும்  49 பேர்  அரசசார்பற்ற  நிறுவனத்திலும்  2,063  பேர்  விவசாயத்திலும்  280  பேர்  கால்நடை  வளர்ப்பிலும் 235  பேர்  மீன்பிடியிலும்   4,937   பேர் நாள்  கூலி  வேலையிலும் ஈடுபடுகின்றனர்.  

2,523  பேர்  வெளிநாட்டில்  தொழில்  புரிவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X