2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முகத்துவாரக் கடல் பகுதியில் சோதனை; 7 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடல் பகுதியில் நடத்திய சோதனையின்போது  3.6 மில்லியன் ரூபாய்  பெறுமதியான தடைசெய்யப்பட்ட 09 சுருக்குவலைகளையும் 1.8 மில்லியன் ரூபாய்  பெறுமதியான 09 படகு இயந்திரங்களையும் கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் 07 பேரை கைதுசெய்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின்  உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கல்லடி கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் 06 பரிசோதகர்கள் முகத்துவாரக் கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (22)  சோதனை நடத்தினர். இதன்போதே மேற்படி 07 பேரையும் கைதுசெய்ததாகவும் அவர் கூறினார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X