2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டு. வைத்தியசாலையின் 9ஆம் 11ஆம் விடுதி மலசலகூடங்களுக்கு புதிய மாபிள்கள் பதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 9ஆம் 11ஆம் விடுதிகளுக்குரிய மலசலகூடங்களுக்கு ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்த அரபு எழுத்துக்களையுடைய மாபிள்கள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக வேறு மாபிள்கள் பதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 9ஆம் 11ஆம் விடுதிகளுக்குரிய மலசலகூடங்களுக்கு அரபு எழுத்தணிகளையுடைய மாபிள்கள் பதிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் கவனத்திற்கும் பொதுமக்கள் சிலர் கொண்டுவந்திருந்தனர். இதனையடுத்து, இம்மாபிள்கள் அகற்றப்பட்டு இதற்கு பதிலாக புதிய மாபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பும் இணைந்து சுமார்  250,000; ரூபா செலவில் இப்புதிய மாபிள்களை பதித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .