2025 மே 05, திங்கட்கிழமை

அரியநேத்திரனிடம் 90 நிமிடங்கள் ரி.ஐ.டி விசாரணை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 03 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.ருத்திரன்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம்  பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்  90 நிமிடங்கள் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.
 
இந்த விசாரணைக்கான அழைப்பு கடிதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஊடாக கடந்த  செவ்வாய்;க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்தார்.
 
குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள விடுதலைப்புலி சந்தேக நபரொருவருடன்  கையடக்க தொலைபேசியில் தான் தொடர்புகளை கொண்டிருந்ததாக  தெரிவிக்கப்பட்டே என்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறைச்சாலையில் கைதிகளிடம் தொலைபேசி இருப்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை என நான் பதிலளித்தேன்.

சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்த போதிலும் விசாரணையின் போது சட்டத்தரணிக்கு அங்கிருக்க அனுமதி வழங்கப்படவில்லை.

என்னிடம் சுமார் 90 நிமிடங்கள்; விசாரணைகள் நடைபெற்றதுடன் வாக்கு மூலமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
 
கைதிகளிடம் தொலைபேசி இருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. ஆனால், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை தெரிவிப்பது வழக்கமாகும்.

அது மட்டுமல்ல எனது கைத்தொலைபேசிக்கு அழைப்புகள் வந்து துண்டிக்கப்பட்டால் அல்லது தவறான அழைப்புகள் வந்தால் தான் அந்த இலக்கங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தொடர்பை ஏற்படுத்தி உரையாடுவது வழமையாகும்  என்றும் வாக்குமூலமளித்தேன் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X