Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அக்கறையோடு இயங்கினால் கிராமங்களில் இடம்பெறும் சீரழிவுகளைத் தடுக்கலாம் என வெருகல் பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
வெருகல் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கூட்டம் வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் இடம்பெறும் சமூக சீரழிவுகளையும் குற்றச் செயல்களையும் இல்லாதொழிப்பதற்கு அதிகாரிகள் மாத்திரம் கண்காணிப்பில் இருந்தால் போதாது. அந்தந்தக் கிராமங்களில் வாழும் மக்களும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தப் பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாடசாலை இடைவிலகல், சிறுவர் தொழிலாளர் அதிகரிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறைகள், போதைப் பொருள் பாவனை என்பன அதிகரித்திருப்பதால்,கிராமத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடும் நேரத்தை விட இந்தக் குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக கவனம்; செலுத்துதிலேயே காலம் கழிகிறது.
எனவே, இந்தக் குற்றச் செயல்களையும் சமூகச் சீரழிவுகளையும் ஒழிக்க அதிகாரிகளோடு கிராமக்களும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேலும்,மேற்படி குற்றச் செயல்களையும் குற்றச் செயல்களின் தோற்றுவாயாகவும் தொடர்ந்து ஒரு சில நபர்களே இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
இவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி சமதாயச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பலப்படுத்தப்படுவதோடு இதற்கு பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
37 minute ago
45 minute ago