Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடுக் கிராமத்தை அண்டிய பகுதிகளினுள் உள்நுழைந்து கடந்த ஒரு வாரகாலமாக மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவந்த தனியன் காட்டுயானையை செவ்வாய்க்கிழமை (13) மாலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க அந்த யானையைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடந்த ஒரு வாரகாலமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்தக் காட்டு யானை ஏற்கெனவேயும் காடுகளை அண்டியுள்ள கிராமங்களுக்குள்ளும் நகரத்தை அண்டிய ஏறாவூர், செங்கலடி போன்ற பிரதேசங்களுக்குள்ளும் நுழைந்து ஆட்களைத் தாக்கிக் கொன்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பயிர்களை துவம்சம் செய்து வந்துள்ளதோடு கிராம மக்களது வீடுகளையும் வயல் நிலங்களையும் கிணறு குளக்கட்டுக்கள் வீதிகள் என்பனவற்றையும் சேதப்படுத்தி வந்துள்ளது.
பிடிக்கப்பட்ட இந்த காட்டு யானையை அநுராதபுரத்திலுள்ள வன இலாகாவுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் சுற்றுவட்ட உத்தியோகத்தர் என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago