Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் தயாராகி வருகின்றது.மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் 42 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் நேற்று வியாழக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.
கழிவுப்பொருட்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஒளியூட்டப்பட்ட இந்த நத்தார் மரம் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் எஸ்.செல்வராசா பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சன்பன்ஸி நிறுவனத்தினால் பாலன் பிறப்பு தொகுதி சிலைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அவற்றை மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் எஸ்.செல்வராசா மாநகர ஆணையாளரிடம் வழங்கிவைத்தார்.


1 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago