Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் கே.அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த கட்டடம் அமைக்கப்படுவதற்கு 4.9 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவிற்கு பல்வேறு தேவைகள் கருதி வருவோர் தமது தேவையினை விரைவாக நிறைவுசெய்யவும் அலைச்சலை தவிர்த்துக்கொள்ளவும் இதன் மூலம் வழியேற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago