Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 27 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அதிகஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான நியமனங்களைப் பெற்ற பின்னர், ஆசிரியர்கள் நகர்ப்புறங்களை நாடிச் செல்லும் போக்கை அங்கிகரிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஈரலக்குளம், பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தில் இன்று (27) நடைபெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில்; அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'கல்குடாக் கல்வி வலயம் பல்வேறு வகையான வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. இந்த வலயத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமான பாடசாலைகள் அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளாக இருந்து வருகின்றன. அத்துடன், இந்தக்; கல்வி வலயத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்றன.
யுத்தம், அதன் பின்னர்; ஏற்பட்ட வறுமை உட்பட பல்வேறுபட்ட காரணிகள் இங்குள்ள மக்களின் கல்வி வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன' என்றார்.
'இங்குள்ள பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெறும் ஆசிரிய ஆசிரியர்கள், அதிபர்கள் தங்களைத் தியாகம் செய்து அர்ப்பணிப்போடு பணியாற்றினால், கல்வியில் பின்தங்கிய பகுதிகளை மீட்டெடுக்க முடியும்.
ஒதுக்குப்புறக் கிராமங்களிலுள்ள வறுமையான மாணவர்களுக்கு கல்வி அறிவை ஊட்டி சேவை செய்யக் கிடைப்பதை பெரும் பாக்கியமாகக் கருதி பணியாற்ற வேண்டும்.
மேலும், கல்வியில் முன்னேற்றம் அடையும் முக்கிய தேவை கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு உண்டு. இந்த விடயத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகளோடு மட்டும் இந்தப் பொறுப்பைச் சுமத்தாமல்; கிராம அமைப்புகள், பெற்றோர், புலம்பெயர்ந்து வாழும்; சமூகம் உதவ வேண்டும். யுத்தத்தால் சொந்தக் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அக்கிராமங்களில் மீள்குடியேற வேண்டும்' என்றார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago