Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
ஏனைய இனங்களைச் சேர்ந்த கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற நிலையில், வேறுபட்டு நிற்கின்ற அனைத்துத் தமிழர்களும் ஒன்றாக இணையும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சும் கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைப் பணியகமும் இணைந்து நடத்திய முன்பள்ளி ஆசிரியர்களின் வினைத்திறன் கண்காட்சி களுவாஞ்சிக்குடியில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு எமக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.
'மேலும், நல்லாட்சி அரசாங்கமானது அரசியலமைப்புச் சாசனத்தைத் தயாரித்து அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவரும் நிலையில், இந்த அரசியலமைப்புச் சாசனம் தொடர்பில் வேறு விதமான வதந்திகளை நல்லாட்சியில் இருக்கும் சில அமைச்சர்கள் பரப்புவதை அறிய முடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனப் போக்கில் உள்ளது. நாங்கள் நினைத்ததைச் சாதிக்கலாம் என்று அந்த அரசியல்வாதிகள் கருதினால், அது அவர்களின் மடமையான செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
நீதியான, நியாயமான, சமத்துவமான அதிகாரத்தையே நாம் கோருகின்றோம். இதன் மூலம் இந்த நாட்டிலுள்ள அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் சமாதானமாக வாழ முடியும். இதற்காகவே எமது தலைவர்களும் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்கின்றனர்.
மதம் வேறு, அரசியல் வேறு. தற்போது மதத்தின் ஊடாக அரசியல் செய்வதன் காரணமாகப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago