Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
ஒவ்வொரு மாணவனும் அப்துல் கலாம் போன்று கனவு காண வேண்டும் என்று தெரிவித்துள்ள பிரான்சிக்கன் சகோதரர்களின் கிழக்கு மாகாண முதல்வர் அருட்சகோதரர் ஜெயராச் அருளானந்தம், சிறு வயதிலிருந்தே அனைவரும் குறிக்கோளை அடிப்படையாக வைத்துச் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் அசீசி சர்வதேச ஆங்கிலப் பாடசாலையின் வருடாந்த கலை விழா, கிரான்குளம் சீ மூன் ஹோட்டலில் அருட்சகோதரர் செபஸ்ரியான் ஜோஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டால் மாத்திரமே, ஒவ்வொருவரினுடைய இலட்சியம் நிறைவேறி, வாழ்வில் சிறப்படைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
'நம் நாட்டில், ஆங்கிலக்கல்வி மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. இந்தக் காலகட்டத்தில், ஆங்கிலக்கல்வி கிராம மட்டத்தில் எட்டப்படுவதில்லை. இதனைக் கருத்திற் கொண்டே, நாம் இப்பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான அசீசீ ஆங்கிலப் பாடசாலையை அமைத்து நடாத்தி வருகின்றோம்' என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.
எம்மால் நடத்தப்படும் இப்பாடசாலையானது, இந்த பிரதேசத்தின் மாணவர்களின் நன்மைகருதி தொடர்சியாக நடைபெறும் என்று இத்தால் உறுதி மொழியளிக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது மாணவர்களுக்கு பரிசில்களும் பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago