Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,பி.எம்.எம்.ஏ.காதர்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமைப்பதவி மோசடியாக பெறப்பட்டதல்ல என பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று(16) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைமைப் பதவி மோசடியாக பெறப்பட்டதல்ல.மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மோசடியாக பறித்து எனக்கு தந்துவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஊடகச் செய்திகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமைக்கு தனது பெயர் முன்மொழியப்பட்டதாகவும் அதனை மோசடியாக பறித்துக் கொண்டதாகவும் அந்தச் செய்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தார்.
முதலில் மாவட்டங்களின் அபிவிருத்திக்குழுத் தலைமைப் பதவி கடந்த காலங்களில் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்ற வரலாறு தெரியாமல் இவ்வாறான ஒரு கருத்தை இவர் கூறியிருப்பது ஒரு சிரேஸ்ட அரசியல்வாதியின் அரசியல் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளைத்தனமான கூற்றாகவே கருதமுடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் பெயர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவிக்கு யாரால் முன்மொழியப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியாலா அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாலா அல்லது பொதுஜன ஐக்கிய முன்னணியாலா அல்லது வேறு ஏதாவது கட்சியினாலா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
மாவட்டக் குழுத் தலைவர் பதவி என்பது அரசில் பதவி வகிக்காதவர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனமான கூற்றாகும்.
இன்று எமது நாட்டில் பல அமைச்சர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் பதவி வழி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைமையாக மூன்று மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துபவர்.போதாக்குறைக்கு அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவரையும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்க வேண்டி ஆசைப்படுவது ஒரு நியாயமான அரசியல் போக்காகக் கருதமுடியாது. மாறாக இது பதவி ஆசைக்கான செயற்பாடாகவே கொள்ளமுடியும்.
கடந்த காலங்களில் இந்த நல்லாட்சியை உருவாக்குவதில் எமது கட்சி சிறுபான்மையினரின் நலன் கருதி தீவிரமாகக் களமிறங்கிச்செயற்பட்டது.
அந்தவகையில், நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை எமக்குத் தரவேண்டும் என்று கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் என்றவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவராகின்ற உரிமை எனக்கு இல்லை என்றா நீங்கள் கருதுகின்றீர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இன்னொரு இணைத்தலைவராக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ. சிறிநேசன் என்பவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.
அவர் தெரிவுசெய்யப்பட்டிருப்பது நியாயமும்கூட. அதனை நாம் வரவேற்க வேண்டும். மாறாக உங்கள் கட்சிசார்ந்த இருவரும் என்னோடு சேர்த்து மூவருமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு இணைத் தலைமையாக செயற்படுவது எந்தவிதத்தில் நியாயம் என நீங்கள் கருதுகிறீர்கள்?
இந்தப் பதவி ஆசையிலிருந்து நீங்கள் வெளிவந்து எதிர்காலத்தில் எல்லாவிதமான வைராக்கியங்களையும் புறந்தள்ளி எம்மோடு ஒற்றுமையாக எமது மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பீர்கள் என நான் நம்புகின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago