Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 02 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஆண்டாக 2016ஆம் ஆண்டை நாங்கள் பார்க்கி;றோம். இந்த ஆண்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட்டு எங்களை நாங்களே ஆளக்கூடிய, அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கியதாக சமஷ்டி தீர்வுத்திட்டம் வழங்கப்பட வேண்டும்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, முனைக்காடு பிரதேசத்திலுள்ள சிவசக்தி இந்து இளைஞர் மன்றத்துக்கு இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (01) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சமஷ்டி அதிகாரத்தை வழங்கிய எந்த நாடும் பிரிந்ததாக சரித்திரம் இல்லை.
இந்த நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று நாம் கோரவில்லை. இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டோம். அதிலிருந்து நாம்; விடுதலை பெறவேண்டும். எங்களை நாங்களே ஆளக்கூடிய பிரதேசமொன்று வேண்டுமென்ற காரணத்தினாலேயே நாம் போராடினோம்' என்றார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்கள்; பல வகைகளிலும் பாதிக்கப்பட்டவையாகும். இயற்கை அனர்த்தங்கள், யுத்தம் உள்ளிட்டவையால் இம்மாகாணங்கள் பாதிக்கப்பட்டன. அவ்வேளைகளில் இந்த மாகாணங்களின் அபிவிருத்திக்காக பல கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகள் வழங்கியிருந்தன. ஆனால், அந்தப் பணம் கடந்த ஆட்சிக்காலத்தில் தெற்குக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், இணைந்த வடகிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இருக்குமானால், நிதி எங்களின் கைகளுக்கு வரும். எமது பகுதிகளை நாம் அபிவிருத்தி செய்யமுடியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago