Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
பாரிய இன அழிப்பைச் சந்தித்துவிட்டு, தற்போது அரசியல் ரீதியான சவால்களுக்கு தாம் முகம் கொடுத்துக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
எனவே, இந்த மே 18ஆம் திகதியை தங்களுடைய இனத்தை அழித்த நாள் என்பதற்கு அப்பால், தெளிவான அரசியலுடன், ஒற்றுமையுடன் பயணிப்பதற்குத் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த அழிவின் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த தீர்வையோ, திட்டத்தையோ பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டும்' என்றார்.
'வெறுமனே அரசியல் இலாபங்களுக்காக, எம்மை அடையாளப்படுத்துவதற்காக மக்கள் மத்தியில் குரல் கொடுக்கிறோம் என்கின்ற நிலைமையைக் காட்டாமல் இதயசுத்தியுடன் நாங்கள் செயற்பட வேண்டும்' என்றார்.
'எங்களுக்கு முகவராக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கம் தங்களது காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக மிகவும் அரசியல் ரீதியாக பலப்படுவதற்காக சிந்தித்துச் செயற்பட வேண்டும்' என்றார்.
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago