2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'39 ஆசிரியர்கள் கடமையை பொறுப்பேற்காவிட்டால், தொழில்களை இழக்கவேண்டி ஏற்படும்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 16 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 39 ஆசிரியர்களும் நாளை வெள்ளிக்கிழமைக்குள் கடமைகளைப் பொறுப்பேற்காவிட்டால், தொழில்களை இழக்கவேண்டி ஏற்படும் என்று வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

ஏற்கனவே வருடாந்த இடமாற்றத்தில் 13 பேரும் கடந்த வாரத்தில் 26 பேரும் வழங்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாரும் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. எனவே, இவர்கள் உடனடியாகத் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும்.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தின் கீழ் 123 ஆசிரியர்கள் கல்குடா வலயத்திலிருந்து வேறு கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே விண்ணப்பத்துக்கமைய 12- 18 வருடங்கள் கல்குடா வலயத்தில் கடமையாற்றிய 80 ஆசிரியர்கள் பதில் கடமை ஆசிரியர்கள் இல்லாது விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய 43ஆசிரியர்கள் பதில் ஆசிரியர்கள் வழங்கப்படும் என்ற வகையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் 39 ஆசிரியர்கள் கல்குடா கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டனர். இருப்பினும் தங்களது இடமாற்றம் தொடர்பில் மேல்முறையீடு செய்தனர். அதன் பின்னர் 26 பேர் கல்குடா கல்வி வலயத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். மிகுதியான 13 ஆசிரியர்களும் இதுவரை கல்குடா கல்வி வலயத்தில் கடமையேற்காத நிலையில் தற்போது 26 பேர் வழங்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்த வாரத்துக்குள் கடமைகளை தங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பாடசாலைகளில் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் தொழில்களை இழக்க வேண்டி ஏற்படும் என்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X