2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆசிரியர்களின் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட அனேக பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழிநுட்பம் போன்ற பாடங்களை போதிப்பதற்கான ஆசிரியர்கள் பெருமளவில் பற்றாக்குறையாக  காணப்படுவதனால் அனேக மாணவர்கள் பாடங்களை கற்பதில் மிகவும் கஷ்டமாகவும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதில் பின்நிலையில் இருப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலானர் சந்திப்பில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“மேற்படி பாடங்களை கற்பதில் மிகவும் கஷ்டமான சூழலில் காணப்படுகின்றனர். எனவே, இப்பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை உடன் நியமிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை கண்டுபிடித்து ஆய்வு செய்து இதனை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள  இவ் உயரிய சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று பாடசாலைகளில் இருந்து வருகின்ற வெற்றிடமாகவுள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறைகள் இதுவரையில் நிவர்த்திசெய்யப்படவில்லை. இதனால் மாணவர்களின் எதிகாலம் பாதிப்படைந்து வருகின்றது. இதுபற்றி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களால் இவ்விடயம் சம்பந்தமாக தனிநபர் பிரேரணை ஒன்றினை பேரவை செயலகத்தின் செயலாளருக்கு  கடிதமூலம் தெரியப்படுத்தியுள்ளேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X