2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

 மட்டக்களப்பு, சித்தாண்டிப் பிரதேசத்தில் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இருவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் எதிர்வரும்  ஜனவரி; மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் பேரின்பம் பிறேம்நாத் நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சித்தாண்டி பிரதேசத்தைச் சேரந்த சுடரொளி என அழைக்கப்படும் ரெட்ணசிகாமணி புண்ணியமூர்த்தி தனது வீட்டில் இருந்த வேளை 17.07.2007 அன்று அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். குறித்த நபர் காணாமல் போன சம்பவத்துடன் ஐந்து பேர் தொடர்புபட்டிருப்பதாக உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே இருவர் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகவதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X