Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லையென மட்டக்களப்பு தாயக மக்கள் மறுமலர்;ச்சி அமைப்பின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், 'காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணைக்குழுவின் செயற்பாடு திருப்திகரமானதாக இல்லை' என்றார்.
'மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் 2,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்று காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மட்டக்களப்பு தாயக மக்கள் மறுமலர்;ச்சி அமைப்பு சமர்ப்பித்திருந்தது. சுமார் 450 பேரிடமே சாட்சியங்களை ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.
காணாமல் போனோரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அல்லது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் விசாரணை செய்து முடிவை அறிவிக்க வேண்டும். இது விடயமாக அனைவரின் கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் எமது தாயக மக்கள் மறுமலர்ச்சி அமைப்பினால் மட்டக்களப்பில் இம்மாத இறுதியில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படும்' என்றார்.
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
22 Dec 2025
22 Dec 2025