Suganthini Ratnam / 2017 ஜனவரி 09 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இது தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டு வருட பூர்த்தி தொடர்பில் இன்று (09) அவரிடம் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலம் ஆரம்பிக்கும் இவ்வேளையில், எமது மக்களின் அபிலாஷைகள் 2017ஆம் ஆண்டிலாவது நிறைவேற்றப்படும் என்ற நோக்குடன் எமது தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வருடத்தில்; வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதுடன், புரையேடிப் போயிருக்கும் பிரச்சினைக்கு நல்லாட்சி அரசாங்கம் தீர்வு பெற்றுத்தர வேண்டும்' என்றார்.
'நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் இரண்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தவர்கள் தமிழ் மக்கள். இதை விட, நல்லாட்சி அரசாங்கத்துக்கு உறுதுணையாக இருந்து உரக்கக் குரல் கொடுத்து வருகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்' என்றார்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago