Suganthini Ratnam / 2016 ஜூலை 04 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இனிமேலும் தமிழ் மக்களை ஏமாற்றும் வித்தைகளைக் கைவிட்டு, அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்;.
மட்டக்களப்பு, முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, அங்கு ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நல்லாட்சியைக் கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில், ஆட்சி அமைத்துக்கொண்ட இந்த அரசாங்கம், இதற்குப் பிரதி உபகாரமாக எந்த வகையில் செயற்படுகின்றது என்பதை மிகக் கவனமாக அவதானிக்க வேண்டியுள்ளது' என்றார்.
'ஒற்றையாட்சி மூலமாக இலங்கையில் எதுவும் சாதிக்கப்படவில்லை. கடந்தகால அனுபவங்களை நோக்குகின்றபோது, ஒற்றையாட்சி தோல்வி கண்டிருக்கின்றது. எனவே எமது பிராந்தியங்களில், எமது மாகாணங்களில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் சமஷ்டி முறையிலான ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். அதுவே சிறந்த தீர்வாக அமையும்' என்றார்.
'இனிமேலும் தமிழ் மக்களை ஏமாற்றும் வித்தைகளைக் கைவிட்டு, நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்ட விடயம் தொடர்பில் செயற்பட வேண்டும். அப்போதே, இந்த அரசாங்கத்தின் மீது சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்' எனவும் அவர் மேலும் கூறினார்.
23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago