Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எனது மகன் உட்பட பல பிள்ளைகளை கடத்தியது இனியபாரதி என்பவர்தான். பல முறை எனது மகனை அவரிடம் கேட்டும் அவர் மகனை விடவில்லை என அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு சனிக்கிழமை(14) விஜயம் செய்த காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எனது மகன் ஸ்ரீ காந்தன் 12.9.2009இல் கடத்தப்பட்டார். இவரை அங்குள்ள இனியபாரதி என்பவர்தான் கடத்திச் சென்றார்.கடத்தப்படும் போது அவருக்கு வயது 17ஆகும். எனக்கு ஒரு பெண் பிள்ளையும் மூன்று ஆண் பிள்ளைகளுமாகும். அதில் 3ஆவது மகனே கடத்தப்பட்டவராவார்.
இவர் கடத்தப்பட்டதன் பின்னர் நானும் எனது மனைவியும் இனியபாரதியிடம் சென்று எனது பிள்ளையைத் தாருங்கள் என பல தடவை கேட்டோம். ஆதற்கு அவர் விசாரணை முடிந்த பின்னர் விடுவிப்போம் என்றார். ஆனால், இதுவரை எனது மகன் விடுவிக்கவில்லை.
பல இடங்களிலும் சென்று முறையிட்டேன் பலரிடம் சென்று எனது மகனின் விடுதலை பற்றி பேசினேன். ஆனால் எனது மகன் விடுவிக்கப்படவில்லை என்றார்.
மேலும்,எனது மகன் கடத்தப்பட்டது போன்று, அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சார்ந்த பிரதேசங்களில் பலரின் பிள்ளைகள் இனியபாரதியினால் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவினராவது ஒரு நியாயமான தீர்வை எமக்கு தந்து எங்களது உறவுகளை கண்டு பிடித்து தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இங்கு வந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago