Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், கைம்பெண்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 'இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு' எனும் மக்கள் தொண்டு நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, களுவாஞ்சிக்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற சி.மு.இராசமாணிக்கத்தின் நினைவாக இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் மூலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், கைம்பெண்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உதவிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், இப்பிரதேச மக்களின் பங்களிப்புடன் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய வகையில் வருமானத்தை பெறும் நோக்கில் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளதாகவும் இந்த அமைப்பைச் சேர்ந்த கீர்த்திவர்மன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago