Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
யாழ். குடாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே வடக்கில் இரண்டு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், 'இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் கொல்லப்பட்டதானது யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டிநிற்கின்றது.
தமிழ் சிங்களவர்கள் என்ற பேதம்பார்த்து இனவாதத்தினை தூண்டாது பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தினை சரியான முறையில் கையாளவேண்டும். அவர்கள் சட்டத்தினை சரியான முறையில் கையாண்டிருந்தால் துப்பாக்கிசூடு நடாத்தியிருக்கமாட்டார்கள். இன்று சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்தையோ இது காட்டுகின்றது.
இன்று வடகிழக்கில் போதைப்பாவனை அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இருந்த யுத்த சூழ்நிலையின்போது அப்போதைய ஆட்சியாளர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட போதைப்பொருள்கள் காரணமாகவே இந்த நிலைமை தற்போது அதிகரித்துள்ளது.
அதற்கு இன்று இளைஞர்கள் அடிமைப்பட்டுள்ளதன் காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது. இந்த நல்லாட்சியில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றங்களில் சிறந்த நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுவருகின்றன' என்றார்.
7 minute ago
7 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 minute ago
13 minute ago
1 hours ago