2025 மே 12, திங்கட்கிழமை

இரண்டு பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகள்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மற்றும் கல்குடாக் கல்வி வலயங்களிலுள்ள இரண்டு பாடசாலைகளில் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் மற்றும் மலசலகூடம், கிணறு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.எம்.எம்.முனீர் தெரிவித்தார்.

இந்த வசதிகளைச் செய்து கொடுத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை இடம்பெற்றது.

மைலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆண்டு 1 ஆண்டு 13 வரை கல்வி கற்கும் சுமார் 550 மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் 24 ஆசிரியர்களின் நன்மை கருதி அங்கு சுத்தமான குடிநீர் வசதி, நவீன மலசலகூட வசதி மற்றும் பாதுகாப்பான கிணறு என்பன சுமார் ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கல்குடா கல்வி வலயத்திலுள்ள பின்தங்கிய பிரதேசமான ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் கற்கும் 197 மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் 17 ஆசிரியர்களின் நன்மை கருதி அங்கு சுத்தமான குடிநீர் வசதி, நவீன மலசலகூட வசதி மற்றும் பாதுகாப்பான கிணறு என்பன சுமார் ஏழரை இலட்ச ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் இந்த வசதிகளைக் கையளிக்கும் நிகழ்வுகளில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான அதிகாரி ஏ.சி.பைஸர்கான், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஸிறாஸ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், மட்டக்களப்பு கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், ஏறாவூர்ப்பற்று கல்வி வலய அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X