Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 30 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டு செல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
2015 இளைஞர் நாடாளுமன்றத்துக்கு இணையாக 'துருணு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இளைஞர்கள் வலுவூட்டப்பட வேண்டும் பலப்படுத்தப்பட வேண்டும்.இளைஞர்கள் வளத்தினை சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தாவிட்டால் ஆக்கபூர்வமான இளைஞர் சக்தி அழிவுப்பாதைக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்படும் என்பதை நாங்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்க வேண்டியதாகவுள்ளது.
இளைஞர் பருவம் என்பது வேகமாக செயற்படக்கூடிய பருவம்.விவேகமாக செயற்படும் பருவம்.அதனை சரியாக பயன்படுத்தும் நாடுகள் வளர்ந்து வல்லரசாக நிற்கின்றது.அந்த இளைஞர் பாதயாத்திரை கண்டுகொள்ளாத நாடுகள் அபிவிருத்தியடையாத நிலையிலேயே உள்ளன.
இலங்கையை பொறுத்தவரையில் தற்காலத்தில் இளைஞர்களை பயன்படுத்த வேண்டும். அவர்களை வளர்த்தெடுத்து சிறப்பான தலைவர்களாக நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் ஊடாக பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்வது என்பது பாராட்டக்கூடியது.
இளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டுசெல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும்.
முழு இளைஞர்களின் சக்தியையும் பயன்படுத்தி அந்நிய நாடுகளில் உள்ள புத்திசாதுரியமான இளைஞர்களையும் பயன்படுத்தியே அமெரிக்கா ஒரு வல்லரசாக வந்துள்ளது.
ஒரு காலகத்தில் அடிமைகளாக பயன்படுத்திய நீக்ரோ இனத்தினை இன்று ஜனாதிபதியாக மாற்றக்கூடிய விதத்தில் இளைஞர்கள் மனித வளத்தினை பயன்படுத்தியதன் காரணமாக உலகின் முதலாவது வல்லரசாக திகழ்கின்றது.
இந்த உதாரணங்களை இலங்கை போன்ற நாடுகள் பின்பற்றும் நிலையேற்படுமானால் அபிவிருத்திகள் ஊடாக வளம்பெறமுடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
45 minute ago