2025 மே 08, வியாழக்கிழமை

'இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இரண்டு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன'

Niroshini   / 2015 நவம்பர் 30 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

கடந்த கால யுத்த சூழலின் போது பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிய கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இரண்டு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தார் தங்கராசா விந்தியன் தெரிவித்தார்.
 
இளைஞர் சிரம சக்தி திட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புலிபாய்தந்தகல் பகுதியில் வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடரந்து உரையாற்றுகையில்,

இளைஞர் சேவை மன்றத்தினால் இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டத்தின் மூலம் நாடு பூராகவும் வீதி அபிவிருத்தித் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அந்தவகையில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் சந்திவெளி மற்றும் புலிபாந்தகல் கிராமங்களில்  இளைஞர்களினால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வீதிகள் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கபடவுள்ளன.

புலிபாய்த கல் பிரதேசம் யுத்த சூழலின்போது அபிவிருத்தியில் பின்னடைந்து காணப்பட்டது. தற்போது புனரமைக்கப்படவுள்ள வீதியில் பாடசாலை மற்றும்  குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. மழை காலத்தில் இந்த வீதியை பயன்படுத்துபவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ள காரணத்தினால் இந்த வீதியை தெரிவு செய்து புனரைமைக்கவுள்ளளோம்.

மேலும்,கடந்த காலங்களில் இளைஞர் வலுவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் சேவைகள் மன்றம் தற்போது பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X