2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இளையவர்களின் திறமைகள் கிராம மட்ட அமைப்புகளுக்குப் பயன்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிராம மட்ட அமைப்புகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாகும். இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் என்ற எண்ணக்கருவுக்கு அமைய இளையவர்களின் முன்னேற்றகரமான திறமைகள் கிராம மட்ட அமைப்புகளுக்குப் பயன்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா இசைநடனக்கல்லூரியில் இன்று திங்கட்கிழமை  காலை நடைபெற்ற இளையோர் தலைமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 187 இளைஞர், யுவதிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், 'ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தினால் இப்பயிற்சிநெறி அமுல்படுத்தப்பட்டது. இப்பயிற்சி நெறிக்கான முழு பொறுப்புக்களும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முகாமைத்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டன' என்றார்.

இந்நிகழ்ச்சி திட்டத்தை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் காணப்படுகின்ற வாகரை, மண்முனை வடக்கு, கோறளைப்பற்று வடக்கு போன்ற 14  பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 200 இளைஞர் யுவதிகள் நேர்முகத்தெரிவின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.  இவர்களில் 187 பேர் ஒரு வருடமாக நடைபெற்ற பயிற்சிகளை நிறைவு செய்து சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு வவுனியா வளாகம் மற்றும் கிழக்குப்பல்கலைகழகத்தை சேர்ந்த விரிவுரையாளர்களினால் திட்ட முகாமைத்துவம், தொடர்பாடல் முகாமைத்துவம், அனர்த்த முகாமைத்துவம், போன்ற பல்வேறு பாடநெறிகள் ஒர் சமூக மட்டத்தில் எந்த வகையான முகாமைத்துவத்தை பயன்படுத்தி சமூகத்தை வழிப்படுத்துவது என்பது பற்றியதாக அமைந்திருந்தது.

இவ் இளைஞர் யுவதிகளை பொறுத்தவரையில் தங்கள் உயர் கல்வியை பல்கலைகழகத்தில் தொடர முடியாமல் ஏக்கத்துடன் இருந்தவர்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே கருதுவதுடன் பயிற்சிநெறியை முடித்த மாணவர்கள் தற்போது  தமது உத்தியோகபூர்வமான  தி லீடர்ஸ் (இளைய தலைவர்கள்) எனும் உத்தியோகபூர்வமான கூட்டமைப்பினையும் அரசாங்க அதிபரின் கரத்தினால் அங்குரார்ப்பணம்; செய்து வைத்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X