2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'உணவுப் பழக்கவழக்கங்களினாலேயே தொற்றா நோய் ஏற்படுகின்றது'

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உணவுப் பழக்கவழக்கங்களினாலேயே அனேகமானோருக்கு தொற்றா நோய் ஏற்படுகின்றது என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

நீரிழிவு நோய் தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று(09) நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன்,

உணவுப்பழக்க வழங்கங்களினால் நீரிழிவு,இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் போன்ற பல தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த நோய்கள் வருமுன் காத்துக்கொள்ள வேண்டும். இந்த தொற்றா நோய்கள் வந்து விட்டால் அதை பூரணமாக சுகப்படுத்த முடியாது. எனினும் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

நமது உணவுப்பழக்கவழக்கங்களை சரியாக பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான தொற்றா நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

காலை உணவாக தானிய வகைகளை உண்பது சிறந்த உணவாகும். அதேபோன்று ஒரு நாளைக்கு குறைந்த அரை மணி நேரமாவது உடல் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.அத்தோடு தினமும் இலைக்கறி வகைகளை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கூடுலாக கோதுமை மாவில் செய்யப்படுகின்ற உணவு வகைகளை தவிர்த்து தானிய வகைகளை கூட்டிக் கொள்ள வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .