Suganthini Ratnam / 2016 நவம்பர் 06 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடிப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது உரிய முறையில் சுகாதாரத்தைப் பேணாத 26 உணவகங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், 02 உணவகங்கள் மற்றும் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினதும் அனுமதி தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பிரதிப் பணிப்பாளர், டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
மேலும், தற்காலிகமாக அனுமதி இரத்துச் செய்யப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினதும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, 02 வாரங்களுக்குள் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே இவற்றுக்கான அனுமதி மீள வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேற்படி உணவகங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் சுகாதாரத்தைப் பேணுமாறு கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் அறிவித்திருந்தன. இதனை அடுத்து, மேற்படி பிரதேசங்களிலுள்ள சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சனிக்கிழமை (05) பொதுச் சுகாதார அதிகாரிகள் திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். அவற்றில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் முன்னேற்றம் காணப்படவில்லை.
அத்துடன், வர்த்தக நிலையங்களில் உணவுப் பொதியிட பயன்படுத்தும் அச்சுப் பத்திரிகைகள் மற்றும் பழுதடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றையும் இதன்போது கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
14 minute ago
30 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
41 minute ago
3 hours ago