2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உதவிகளைப் பெற்றுக்கொண்டு துஷ்பிரயோகம் செய்பவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 12 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வீட்டு வசதி உட்பட ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைத்; துஷ்பிரயோகம் செய்பவர்கள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வாகரைப் பிரதேச அனர்த்தச் செயலணி தீர்மானம் எடுத்துள்ளதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, இன்று (12)  தெரிவித்தார்.

வீட்டு வசதி உட்பட ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைத்; துஷ்பிரயோகம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள் செயலணியால் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,  பாதிக்கப்பட்ட சிலர் தங்களுக்கு எந்தவித அரசாங்க  உதவிகளும் கிடைக்கவில்லை என்பதுடன், இது தொடர்பில் அரசாங்க அலுவலர்களும் அதிகாரிகளும் கரிசனை கொள்ளவில்லை என்று தங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறில்லை. அத்தகையவர்கள் அரசாங்கத்தின் வீடமைப்பு வசதி உட்பட இன்னும் பல்வேறு வகையான வாழ்வாதாரத் திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டு உதவிகளைப் பெற்றுள்ளார்கள்.

அத்தகையவர்கள் பெற்ற உதவிகளை துஷ்பிரயோகம் செய்கின்றவர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு உதவித் திட்டத்தின் கீழ் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளைப் பாழடைய வைத்துவிட்டு, வேறு இடங்களுக்குச் சென்று விடுகின்றனர். அதேவேளை, அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளையும் குறித்த நோக்கத்துக்குப்; பயன்படுத்தாது  துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாறு நடப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளைப் பாழடைய வைத்திருப்போர் தொடர்பில்  அதிக கவனம் செலுத்தப்பட்டு, அது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.

'மேலும், இப்பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டு வசதி மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் உட்பட இன்னமும் குடும்பங்களுக்கான வசதிகள் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி வாகரைப் பிரதேச அனர்த்தச் செயலணி கவனம் செலுத்தி வருகின்றது' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X