2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு உள்ளது'

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்காலத்தில் உயிரிழந்த அதன் தலைவர் உறுப்பினர்கள் நினைவுகூர தடையேற்படுத்தப்படாத நிலையில், தனது இனத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த ஆண்டு நல்லாட்சி ஒன்று ஏற்பட்டதன் பின்னர் இந்த நிகழ்வினை நாங்கள் செய்கின்றோம்.காலம்காலமாக வந்த அரசாங்கங்கள் இந்த நாளை நினைவுகூரக்கூடாது என்பதில் உறுதியாக செயற்பட்டுவந்தன.

எவ்வாறு இருந்தாலும் தமிழர்களின் நலனுக்காக அவர்களின் உரிமைக்காக தியாகங்களை செய்து மரணித்த உறவுகளை நினைவுகூர்வதில் எதுவித கெடுதலும் ஏற்படப்போவதில்லை.இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர்வதற்கு தடைகள் இருக்ககூடாது என்பதே தமிழர்களின் எண்ணப்பாடாகும்.

படை வீரர்கள் இறந்தார்கள் என்பதற்காக அவர்களை நினைவுகூராமல் இல்லை.அதேபோன்று உயிரிழந்த தமிழ் இளைஞர்களை நினைவுகூரவேண்டிய கடமை அவர்களின் உறவுகளான தமிழ் மக்களுக்கும் உள்ளது.இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு இந்த நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் தடையிருக்கமுடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X