Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
புதிய அரசியலமைப்பு மூலம் இணைந்த வடக்கு, கிழக்கில் சுயாட்சி ஏற்படும்போது, இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் பெரும்பான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படும்; எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு எங்களுடைய ஒரே தீர்வு. இதைத் தவிரை எந்தத் தீர்வையும் நாம்; ஏற்கமாட்டோம். முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய நிலைமையை வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்போம் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, சித்தாண்டிப் பிரதேசத்தில் காலாசார மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும்; நிகழ்வு, புதன்கிழமை (19) மாலை நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,'தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளைக் குழப்புவதில் கூட்டு எதிரணி முன்னின்று செயற்படுகி;ன்றது. ஆனாலும், அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் எமது தலைவர் இரா.சம்பந்தன் உறுதியாக உள்ளதுடன், இது தொடர்பான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். அந்த முயற்சிகளில் பலாபலன் விரைவாகக் கிடைக்கவேண்டும் என்பதே எமது அவாவாகவுள்ளது.
அரசாங்கத்தால் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டாலும், அவை இழுபறி நிலையில் சென்றுகொண்டிருப்பதை நாம்; அவதானிக்கிறோம். எமக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்காவிடின், இந்த அரசாங்கம் தொடர்ந்து இயங்காதாவாறு அஹிம்சை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எமது தலைவர் கூறியுள்ளார்' என்றார்.
'அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றியமைத்து வேறொரு விதமாக முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப் போகும் சட்டமூலம், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடியதாக இருந்தால், அதை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும்போது, அதற்கு நாம்; முழுமையான எதிர்ப்பை வெளியிடுவோம்.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுவதால், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அரசாங்கத்தின் பல விடயங்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். இந்த அரசாங்கம் மேலும் சட்டங்களைக் கொண்டுவந்து, எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருக்குமாயின், அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும்' எனவும் அவர் கூறினார்.
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
3 hours ago
3 hours ago