2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'உலமாக்கள் சவால்களை எதிர்நோக்குகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலமாக்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் வெளியிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

உலமாக்களுக்கான செயலமர்வு கடந்த இரண்டு நாட்களாக  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஞாயிற்றுக்கிழமை (31) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இவ்வாறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து அவைகளை தீர்க்கக்கூடிய உலமாக்களாக எமது உலமாக்களை மாற்ற வேண்டியுள்ளது. உலமாக்களின் மார்க்க அறிவை விருத்தி செய்வதுடன், அவர்களை சிறந்த அறிஞர்களாகவும் மாற்ற வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சவூதி அரேபியாவிலுள்ள அறிஞர்கள் மற்றும்  உலமாக்களைக் கொண்டு இங்கு நாம் உலமாக்களுக்கான செயலமர்வுகளை நடத்த திட்டமிட்டோம். அதில் ஒரு கட்டமாகவே இந்த செயலமர்வும் நடைபெற்றுள்ளது' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .