2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஊடகவியலாளர் ஜி.நடேசனின் நினைவுப்பேருரை நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 மே 11 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அனுசரணையுடனும் இம்மாதம் 29ஆம் திகதி  மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு வடக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் அனுசரணை வழங்குவதுடன், அதன் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் புத்திஜீவிகளும் உரையாற்றவுள்ளனர் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும் தலைவருமான எல்.ரி.அதிரன் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், அமைப்புகள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் ஜி.நடேசன், நெல்லை நடேசன் எனப் பலராலும் அறியப்பட்ட ஐயாத்துரை நடேசன் 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி, தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கடமையாற்றிய இவர்,  ஆசிரியராகவும் வடக்கு, கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது மாகாண சபையின் தகவல் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

1990ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண சபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்குச்; சென்றபோது, ஐயாத்துரை நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார்.

இதனை அடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஐயாத்துரை நடேசனின் கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X