2025 மே 10, சனிக்கிழமை

'எட்டு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடு'

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து எட்டு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாநகரசபையில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனினும் இதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு, மாட்டு உரிமையாளர்கள் மாடுகளை உரியவாறு பாதுகாக்க வேண்டும்.

இது தொடர்பில் அவர்களுக்கு பல்வேறு தடவைகள் அறிவுறுத்தல்கள் வழங்கியபோதிலும், அது தொடர்பில் அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

கட்டக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைகளை இரவு வேளையிலேயே மேற்கொள்ளகூடியதாகவுள்ளது. பகல் வேளைகளில் அவற்றை பிடிக்கும்போது, அவை வீதிகளில் விபத்துகளை ஏற்படுத்தும் நிலைமையேற்படுகின்றது.

கடந்த ஆண்டு இவ்வாறு செய்ய முற்பட்டபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்த நிலையில் அவற்றின் செலவுகளை மாநகரசபையே செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X