2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'எதிர்க்கட்சி தலைவர் பதவி சிறுபான்மை சமூகங்களுக்கான அங்கிகாரம்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தமையானது சிறுபான்மை சமூகங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரமாகுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்தது.

இது தொடர்பில்  செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'அண்மைக்காலமாக இலங்கையின் அரசியல் ஒழுங்கில் நம்பிக்கை தரக்கூடிய பல்வேறு மாறுதல்கள் இடம்பெற்றுவருகின்றன. 2009இல்; ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபோதிலும், சிறுபான்மை சமூகங்களை அடக்கி ஆளும் அரசாங்கமே பதவியிலிருந்தது. ஆனால், இவ்வருடம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமையானது அராஜக ஆட்சிக்கு விழுந்த முதலாவது அடியாகும். இதனைத் தொடர்ந்து புதிய ஜனநாயக ஒழுங்கு கட்டியெழுப்பப்படுகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் உடன்பாட்டுடன் கூடிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு நல்ல விடயமாகும். அதேபோன்று, எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் நல்ல மாற்றம். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி இந்நாட்டில் நல்லாட்சியை முன்னெடுப்பதும்; ஜனநாயக வெளியை மாசுபடுத்தாது பாதுகாப்பதும் அனைவரினதும்; கடமையாகும். குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களின்  பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்வதும் பாரிய பொறுப்பாகவுள்ளது.

தேசிய நலன் சார்ந்த விடயங்களிலும் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடுகளிலும் சிறுபான்மை சமூகங்களின் நீதியான தீர்வு முயற்சிகளிலும் எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் விருப்பமாகவுள்ளோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரியப்படுத்துகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X