2025 மே 09, வெள்ளிக்கிழமை

'எந்த அமைப்பை உருவாக்கினாலும் அது சாபக்கேடு'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்த அமைப்புகளை உருவாக்கினாலும், அது கிழக்கு மாகாணத்துக்கு சாபக்கேடுவென கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறையிலுள்ள தனது அலுவலகத்தில்  சனிக்கிழமை (26) மாலை ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தற்போதைய நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர, பலவீனப்படுத்தக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் தீர்வு விடயத்துக்கு குறிப்பாக, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும். அதை விடுத்து இன்னுமொரு மாற்றுத்தலைமைக்கு பின்னால் செல்வது கிழக்கு மாகாணத் தமிழர்களாகிய நாம் எமது தலையில் நாமே மண் போடுவதற்கு ஒப்பாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வட, கிழக்கு இணைந்த அரசியல் தீர்விலிருந்து தடம் மாறவில்லை. எதிர்வரும் 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் அரசியல் தீர்வு கிடைக்குமென்ற உறுதியுடன் தமது செயற்பாட்டை முன்னெடுக்கும்போது, அதற்கு மாற்றீடாக வேறு ஒரு பெயரில் அமைப்புகள் ஏற்படுத்துவது இன்னும் காலத்தை இழுத்தடிக்குமே தவிர, அதனால் அடையும் இலாபம் அரசாங்கத்துக்கு இலாபமாக மட்டும் இருக்கும். எமக்கு எந்த நன்மையும் ஏற்படாது' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X