2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எழுக தமிழ் பேரணியில் ஒன்றிணையுமாறு அறைகூவல்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 01 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் எழுக தமிழ் பேரணியில் அணி திரளுமாறு புத்தாண்டு தினத்தில் அறைகூவல் விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ.வசந்தராசா, இன்று  (01)  தெரிவித்தார்.

உரிமையை மறுக்கும் இனவாதத்துக்கு எதிராக  ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'உரிமைக்காக சலுகைகளை மறுத்து கடந்த 06 தசாப்தங்களுக்கும் மேலாகப் போராடி, ஆயுதப் போராட்டம் மௌனித்து 07 ஆண்டுகளாகி விட்டன.

ஆயினும், ஜெனீவா தொடங்கி சர்வதேசம் வரை எமது உரிமைக்கான குரல் உரக்க ஒலித்தும், இலங்கை அரசாங்கம் இனப் பிரச்சினை தொடர்பாக தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை அங்கிகரிக்கத் தயாரில்லாத நிலைப்பாட்டை முறியடிக்க எழுக தமிழ் போராட்டம் தேவையாகவுள்ளது.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களே தமிழர் தாயகம் என்பதுடன், சுயநிர்ணயத்துடனான சமஷ்டித் தீர்வை வலியுறுத்துகின்றோம். தமிழர் தாயகத்தைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்த வேண்டும் என்பதுடன், விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருகின்றோம்.

யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகத்துக்கு வலியுறுத்தியும் தமிழ் பேசும் மக்களுக்கு மீதான அரசியல், சமூக, பொருளாதார தொழில் வாய்ப்பு ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கண்டனங்கள் உட்பட இன்னும் பல விடயங்களை வலியுறுத்துகின்றோம், இவற்றை வலியுறுத்தியே எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X